தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி!

 

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி!

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது.

இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்ராஜ் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு, முக்கிய சாலைகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி!

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது மூன்றாம் மைல், விவிடி சிக்னல், நீதிமன்றம் வழியாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சென்று நிறைவடைந்தது. முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.