நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி!

 

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றக் கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. கொரோனாத் தொற்று குறையாத நிலையில், ஆறு மாதத்துக்கு ஒரு முறை நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும் என்பதால் செப்டம்பர் 14ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி!

நாடாளுமன்றம் கூடும் முதல் நாளான செப்டம்பர் 14ம் தேதி மக்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு 15ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இரவு ஏழு மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது சீரோ ஹவர் எனப்படும் கேள்வி நேரம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரை மணி நேரம் கேள்வி நேரத்துக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.