கொரோனாவால் மரணம்; தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க நிதி ஒதுக்கீடு!

 

கொரோனாவால் மரணம்; தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க நிதி ஒதுக்கீடு!

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள் 34 பேரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா முதல் அலை அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலும் மருத்துவமனை வாசல்களிலும் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், தங்களது உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றுவதற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் என பலர் உயிரிழக்க நேர்ந்தது.

கொரோனாவால் மரணம்; தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க நிதி ஒதுக்கீடு!

அவர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசு, உயிரிழக்க நேர்ந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி, தற்போது 34 மருத்துவ பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கொரோனாவால் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க அரசு ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.