தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

 

தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி இன்று நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் கணினி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கோவிந்தா ராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பரிதிநிதிகள் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஒதுக்கீடு செய்யும் பணியை பார்வையிட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

அப்போது, தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி கணினி சுழற்சி முறை தேர்வின் படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை ஆட்சியர் கோவிந்தாராவ், அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கினார்.