“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி” : அமைச்சர் ஜெயக்குமார்

“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை  ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி” : அமைச்சர் ஜெயக்குமார்

வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார்; புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை  ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி” : அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக சார்பில் நாளை தேர்தல் பிரச்சார துவக்க பணியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கவுள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரும் தலைமை தாங்கி நடத்துகின்றனர்.

“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை  ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி” : அமைச்சர் ஜெயக்குமார்

இதற்காக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,மாவட்ட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

“முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை  ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி” : அமைச்சர் ஜெயக்குமார்

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்ட அரங்கை அமைச்சர் ஜெயக்குமார் இன்று பார்வையிட்டார் . அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும். முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவரிடம், எம்ஜிஆர் என்ன நல்லாட்சி தந்தார் என்ற சீமானின் கேள்வி குறித்து கேட்கப்பட்டபோது, வரலாறு தெரியாமல் சீமான் பேசுகிறார்; புரட்சித் தலைவரை தொட்டால் கெட்டான் என்றார்.