உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அண்ணாமலை விளக்கம்!

 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அண்ணாமலை விளக்கம்!

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு எடுக்கும். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அண்ணாமலை விளக்கம்!

இந்நிலையில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை, “முதல்வர் மு.க .ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று சொல்வதன் காரணம் என்ன? மத்தியில் காங்கிரஸ் இருந்தபோது ஒன்றிய அரசு என்று ஏன் சொல்லவில்லை. அப்போது திமுக காங்கிரஸ் உடன் அங்கம் வகித்தால் திமுக ஒன்றிய அரசு என கூறவில்லை. முதல்வராக இருந்த கருணாநிதி கூட ஒன்றிய அரசு என கூறவில்லை. தற்போது திமுகவினர் ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு காரணம் என்ன?என்பதை விளக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அண்ணாமலை விளக்கம்!

நகர் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாஜகவின் ஆர்வமாக உள்ளனர். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி உள்ளதா என்பது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் . தமிழகத்தில் காங்கிரஸ் திமுகவின் பி டீமாக இயங்கி வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் தற்போது தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளது . இதற்கு காரணம் அணில் என கூறாமல் ஆக்கபூர்வமான, அறிவியல் பூர்வமாக என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.