ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லாபம் ரூ.106 கோடி.. வருவாய் 66 சதவீதம் உயர்வு..

 

ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லாபம் ரூ.106 கோடி.. வருவாய் 66 சதவீதம் உயர்வு..

ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.106 கோடி ஈட்டியுள்ளது.

ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் 2021 ஜூன் காலாண்டில் நிகர லாபமாக ரூ.106 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கும் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.30 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லாபம் ரூ.106 கோடி.. வருவாய் 66 சதவீதம் உயர்வு..
ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ்

2021 ஜூன் காலாண்டில் ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.3,449 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 66 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2,077 கோடி ஈட்டியிருந்தது.

ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் லாபம் ரூ.106 கோடி.. வருவாய் 66 சதவீதம் உயர்வு..
கார்கோ

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.63 சதவீதம் உயர்ந்து ரூ.221.50ஆக இருந்தது.