புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்..கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி வழிபடும் மக்கள்!

 

புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்..கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி வழிபடும் மக்கள்!

2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்த நாடு தழுவிய முழு ஊரடங்கு கடந்த 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. தற்போது நோய் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் மட்டுமே இம்மாதம் 30ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதகளில் இன்று முதல் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல்(இன்று) மொத்தம் 3 கட்டங்களாக லாக்டவுன் தளர்வுகளை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. முதல் கட்டமாக வரும் 8ம் தேதி(நாளை) முதல் ஷாப்பிங் மால்கள், ரெஸ்ட்ராண்ட், ஹோட்டல்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல வழிப்பாட்டு தலங்களையும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

புதுச்சேரியில் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்..கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றி வழிபடும் மக்கள்!

அதன் படி இன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், மணக்குள விநாயகர் ஆலயம் மற்றும் காரைக்கால் பள்ளி வாசல் உள்ளிட்ட பல புகழ்பெற்ற ஆலையங்கள் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. காலை முதலே கோவில்களில் மக்கள் வழிபட தொடங்கி விட்டனர். மக்கள் கோவிலுக்கு நுழைவதற்கு முன்னர் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தி கொண்டு, பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை வழங்கிய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதே போல சமூக இடைவெளியும் முறையாக பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதே நடைமுறை தான் மசூதி, தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.