ஸ்டாலினால் கிடைத்த பயிர்க்கடன் தள்ளுபடி : அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நன்றி!

ஸ்டாலினால் கிடைத்த பயிர்க்கடன் தள்ளுபடி : அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நன்றி!

விவசாய கடன் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

ஸ்டாலினால் கிடைத்த பயிர்க்கடன் தள்ளுபடி : அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நன்றி!

சட்டமன்ற தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைந்தால் விவசாய கடன், கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் சட்டப்பேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதல்வர் பழனிசாமி, ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலினால் கிடைத்த பயிர்க்கடன் தள்ளுபடி : அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு நன்றி!

இந்நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் சந்தித்து பேசினர். எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் ஆட்சிக்குவந்தால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனால் வாய்மூடி இருந்த தமிழக அரசு, விவசாயக்கடனை தள்ளுபடி செய்தது. இன்னும் சில மாதங்களில் கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடி ஸ்டாலினால் உடனடியாக கிடைத்துள்ளது.அதனால் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.