10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. மீதமுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறவிருந்தது.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல்.. வழக்குகள் முடித்துவைப்பு

ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் 11 ஆம் வகுப்பின் மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபபட்டது. அதே போல மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் அடிப்படையிலும் வருகை அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கம் ஆசிரியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இன்று மீண்டும் எழுந்த வழக்கில் தமிழக அரசு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தாக்கல் செய்தது. அதனால் பொதுத்தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.