கொரோனா எப்ப முடியுறது சகஜ நிலை எப்ப திரும்புறது! தேனியில் நாளை முதல் அனைத்து கடைகளும் திறக்கப்படும்!!

 

கொரோனா எப்ப முடியுறது சகஜ நிலை எப்ப திரும்புறது! தேனியில் நாளை முதல் அனைத்து கடைகளும் திறக்கப்படும்!!

தேனி மாவட்டத்தில் நாளை முதல் அனைத்து வணிக நிறுவனங்களும் செயல்படும் என தேனி மாவட்ட வனிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தினம் தினம் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொரோனா தடுப்பு மையங்களை அதிகரிக்கும் நடவடிக்கையில் தேனி மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் 2732 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், தற்போது 1231 கொரோனா நோயாளிகள் உள்ளன. 1465 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா எப்ப முடியுறது சகஜ நிலை எப்ப திரும்புறது! தேனியில் நாளை முதல் அனைத்து கடைகளும் திறக்கப்படும்!!

தமிழகத்தில் நோய் பரவல் அதிகரித்த நிலையில் தேனி மாவட்டத்திலும் நோய் பரவல் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் நேரக்கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கினை மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்தியது. இந்த நேரக்கட்டுபட்டிலும் சில கடைகளை திறக்க அனுமதிக்கபடவில்லை. இந்நிலையில் தேனி நகரில் வனிகர்கள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்த போதிலும் அதிகாரிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லததால் நோய் பரவல் அதிகரித்தது. கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு என்ற பெயரில் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளதாகவும், நோய் தொற்று எப்போது முடிவடையும் என தெரியாததால் நாளை முதல் அனைத்து கடைகளையும் திறக்க உள்ளதாக தேனி மாவட்ட வனிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மற்ற தொழில் நிறுவனங்கள் காலை 10 – இரவு 8 மணி வரையிலும், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என தேனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.