ஒரு கைதியால் சஸ்பண்ட் ஆன அனைத்து காவலர்கள் -காவல் நிலையமே காலியான கதை. .

 

ஒரு கைதியால் சஸ்பண்ட் ஆன அனைத்து காவலர்கள் -காவல் நிலையமே காலியான கதை. .

காவலில் இருந்த கைதி இறந்ததால் ஒரு காவல் நிலையமே மூடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியலையை  உண்டாக்கியது

ஒரு கைதியால் சஸ்பண்ட் ஆன அனைத்து காவலர்கள் -காவல் நிலையமே காலியான கதை. .

ராஜஸ்தானின் பார்வாடா பகுதியில் வசிக்கும் பஜன் லால் என்ற 55 வயதான நபர் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று அவரின் குடும்பத்தினருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தார் .அப்போது அவரின் எதிர் தரப்பினர் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .அதன் பிறகு அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த  பஜன்லாலை கைது செய்து விசாரிக்க அழைத்து சென்றனர் .

அன்று இரவு அந்த பஜன் லால் போலீஸ் காவலில் திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார் .அதனால் அவரின் குடும்பத்தினர் அந்த காவல் நிலைய அதிகாரிகள்  மற்றும் கான்ஸ்டபிள்கள் தாக்கியாதால்தான் தங்களின் உறவினர் லால் இறந்து விட்டதாக கூறி தகராறு செய்தனர் .அது  மட்டுமல்லாமல் அவர்கள்  உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்தனர் .புகாரை பெற்ற போலீஸ் அதிகாரிகள் அந்த காவல் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்தார்கள்  .இதனால் அந்த காவல் நிலையமே காலியானது கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்  .அதன் பிறகு அந்த பஜன் லால் இறப்பு பற்றி போலீஸ்  அதிகாரிகள் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி  வருகிறார்கள் .இப்போது அந்த இறந்த பஜன் லால் உடல் மறுதத்துவ  பரிசோதனை அறிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது .