ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்க கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பார் கவுன்சில் கோரிக்கை, முதன்மை அமர்வு நீதிபதிகளின் கருத்துக்கு ஏற்ப, அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற அறையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரிக்க அனுமதியளித்தது.

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!

இதன் காரணமாக ஊரடங்கு காரணமாக இருநீதிபதிகள் அடங்கிய 2 அமர்வும், தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்து வந்தனர்.

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்க உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்!

இந்நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் நடந்த அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில்சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. காணொலி மூலம் மட்டும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.