பார்ப்போரை கடித்துக் குதறிய குரங்கு… ஆயுள் தண்டனை வழங்கி சிறைவைப்பு!

 

பார்ப்போரை கடித்துக் குதறிய குரங்கு… ஆயுள் தண்டனை வழங்கி சிறைவைப்பு!

ஒரு குரங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்குபடுவதை எப்போதாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? கான்பூர் மிருகக்காட்சிசாலையில் குரங்கு ஒன்றிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

‘கலுவா’ என்று பெயரிடப்பட்ட இந்த குரங்கு மிர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த குரங்கு இதுவரை 250 க்கும் மேற்பட்டவர்களைக் கடித்துள்ளது. அதில் ஒருவர் இறந்துள்ளார்.

பார்ப்போரை கடித்துக் குதறிய குரங்கு… ஆயுள் தண்டனை வழங்கி சிறைவைப்பு!

அறிக்கைகளின்படி, கலுவா அந்த பகுதியைச் சேர்ந்த மறைநூல் அறிஞர் ஒருவரின் செல்லக் குரங்கு தான் அது. அதற்கு தினமும் மது கொடுத்து வந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளது. நாளடைவில் மது கிடைக்காமல் அந்த குரங்கு ஆக்ரோஷமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்களை கடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் வனத்துறையினர் அந்த குரங்கை பிடித்து கான்பூர் மிருகக்காட்சிசாலையில் விட்டனர்.

“நாங்கள் குரங்கை சில மாதங்கள் தனிமையில் வைத்திருந்தோம், பின்னர் அதை ஒரு தனி கூண்டுக்கு மாற்றினோம். அதன் நடத்தையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அது முன்பு போலவே ஆக்ரோஷமாக இருக்கிறது. அது இங்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் இப்போது அது தனது வாழ்நாள் முழுவதும் சிறை வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது,”என்று மிருகக்காட்சிசாலையின் மருத்துவர் மொஹமட் நசீர் கூறினார்.