தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மது விற்பனையா?… குடிமகன்கள் ஷாக்!

 

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மது விற்பனையா?… குடிமகன்கள் ஷாக்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மாநில அரசுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசி தான் ஒரே வழி என நிபுணர்கள் பரிந்துரைப்பதால் தடுப்பூசி போடும் பணியும் துரிதப் படுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மது விற்பனையா?… குடிமகன்கள் ஷாக்!

எனினும், மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள். வட மாநிலத்தின் ஒரு சில கிராமங்களில் சுகாதாரத் துறையினர் தடுப்பூசி செலுத்த வந்ததை விஷ ஊசி போட வருகிறார்கள் என தவறாக நினைத்துக்கொண்டு மக்கள் தெறித்து ஓடிய சம்பவம் தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை வெளிச்சம் போட்டு காட்டியது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி குறுகிய காலகட்டத்திற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அந்தந்த மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் மது விற்பனையா?… குடிமகன்கள் ஷாக்!

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் எடவாக் மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருப்பது குடிமகன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஹெம் சிங் என்னும் அதிகாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுக் கடைகளில் ஆய்வு செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த குடிமகன்களிடம் தடுப்பூசி குறித்து கேட்க, பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றை காட்டினால் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மதுக்கடை உரிமையாளருக்கு அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து அவர் சென்றுள்ளார். இது உத்தரவு அல்ல. அந்த மது கடைக்கு வழங்கப்பட்ட அறிவுரை தான் என்று கூறப்படுகிறது.