“சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் திறப்பு”.. இத்தனை கோடிக்கு மது விற்பனையா?!

 

“சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் திறப்பு”.. இத்தனை கோடிக்கு மது விற்பனையா?!

தமிழகத்தில் கொரோனாவால் கிட்டத்தட்ட 2 மாதங்களாக டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆனால் கொரோனாவால் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக டாஸ்மாக்கை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் படி சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது தான் டாஸ்மாக் திறக்கப்படாததற்கு காரணமாக இருந்த நிலையில், தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதால் மீண்டும் டாஸ்மாக்கை திறக்க அரசு முடிவெடுத்தது.

“சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் திறப்பு”.. இத்தனை கோடிக்கு மது விற்பனையா?!

5 மாதங்களுக்கு பிறகு நேற்று சென்னையில் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டது. சாமியானா, மைக் செட் உள்ளிட்ட அமைப்புகளுடன் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டதால் மதுபிரியர்களின் கூட்டம் நேற்று அலைமோதியது. இருப்பினும், 500 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் ரூ.33.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதிலும் இருக்கும் 720 டாஸ்மாக் கடைகளிலும் சேர்த்து 33.50 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.