டாஸ்மாக்கில் குறையும் மது விற்பனை… கொரோனா அச்சமா?

 

டாஸ்மாக்கில் குறையும் மது விற்பனை… கொரோனா அச்சமா?

கொரோனா பரவல் கட்டுபாட்டு நடவடிக்கையாக கடந்த மாதம் 10ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வருவாய் இல்லாமல் அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதிக்கவில்லை. பின்னர், பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க என தமிழக அரசு அனுமதி அளித்தது. எஞ்சியுள்ள 11 மாவட்டங்களில் திறக்கக்கூடாது என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

டாஸ்மாக்கில் குறையும் மது விற்பனை… கொரோனா அச்சமா?

அதன் படி, 35 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு கூட்டம் இல்லை. சாதாரண நாட்களில் விற்பனையாகக் கூடிய சராசரியான அளவுக்கு தான் மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.127.09 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக்கில் குறையும் மது விற்பனை… கொரோனா அச்சமா?

நேற்று முன்தினம் ரூ.164.87 கோடிக்கு விற்பனையான நிலையில் நேற்று ரூ.127 கோடியாக குறைந்துள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.37.28 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.33.41 கோடிக்கும் சேலம் மண்டலத்தில் ரூ.28.76 கோடிக்கும் திருச்சி மண்டலத்தில் ரூ.27.64 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. கொரோனா அச்சத்தால் மது விற்பனை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.