பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லை… கொரோனா தடுப்பூசி போட மாட்டோம்.. மலட்டுதன்மை ஏற்படுத்தும்.. சமாஜ்வாடி தலைவர்கள்

 

பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லை… கொரோனா தடுப்பூசி போட மாட்டோம்.. மலட்டுதன்மை ஏற்படுத்தும்.. சமாஜ்வாடி தலைவர்கள்

பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லாததால் அவர்கள அளிக்கும் கொரோனா தடுப்பூசி போட மாட்டோம். மேலும் அந்த தடுப்பூசி ஒரு நபரை ஆண்மையற்றவராக மாற்றக்கூடும் என்று சமாஜ்வாடி தலைவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கிட்டத்தட்ட பயன்பாட்டுக்கு தயாராகி விட்டது. ஆகையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஆகையால் பா.ஜ.க. அரசு அளிக்கும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.

பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லை… கொரோனா தடுப்பூசி போட மாட்டோம்.. மலட்டுதன்மை ஏற்படுத்தும்.. சமாஜ்வாடி தலைவர்கள்
பா.ஜ.க.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக கூறியதாவது: பா.ஜ.க. அரசு நம்பிக்கைக்குரியது அல்ல என்பதால் நான் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொள்ள மாட்டேன். இந்த நேரத்தில் கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதிலும் பா.ஜ.க. அரசு அளிக்கும் தடுப்பூசியை. பா.ஜ.க அரசின் தடுப்பூசியை என்னால் எப்படி நம்ப முடியும். வாய்ப்பே இல்லை?. எனது அரசு ஆட்சி அமைக்கும்போது எல்லோரும் இலவசமாக தடுப்பூசியை பெறுவார்கள். நாங்கள் பா.ஜ.க. அரசின் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. அரசு மீது நம்பிக்கையில்லை… கொரோனா தடுப்பூசி போட மாட்டோம்.. மலட்டுதன்மை ஏற்படுத்தும்.. சமாஜ்வாடி தலைவர்கள்
அகிலேஷ் யாதவ்

தலைவர் அகிலேஷ் யாதவை காட்டிலும் அவரது கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு படி மேலே போய் தடுப்பூசி போட்டு கொண்டால் ஒரு நபரை ஆண்மையற்றவராக மாற்றி விடக்கூடும் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சமாஜ்வாடியின் அசுதோஷ் சின்ஹா கூறுகையில், அகிலேஷ் யாதவ் இதை சொல்லியிருந்தால் தீவிரமான ஒன்றாக இருக்கும். அரசாங்கத்தின் எந்திரங்களை நாங்கள் நம்பவில்லை. உண்மைகளின் அடிப்படையில் இதை அவர் கூறியுள்ளார். அவர் தனக்கு தடுப்பூசி போடமாட்டேன் என்றால் கோவிட்-19 தடுப்பூசியில் ஏதாவது இருக்கலாம். இது தீங்கு விளைவிக்கும். மக்களை கொல்ல அல்லது குறைக்க இந்த தடுப்பூசி வழங்கப்பட்டதாக நாளை மக்கள் கூறுவார்கள். நீங்கள் ஆண்மையற்றவராக ஆகலாம் அல்லது எதுவும் நடக்கலாம். அகிலேஷ் யாதவ் இதை சொல்லியுள்ளதால் மாநிலத்தில் யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என்று தெரிவித்தார்.