‘அஜித் பங்களிப்பில் கொரோனா ஒழிப்பு பணி’ டாக்டர் கார்த்திக் நாராயணன் தகவல்!

 

‘அஜித் பங்களிப்பில் கொரோனா ஒழிப்பு பணி’ டாக்டர் கார்த்திக் நாராயணன் தகவல்!

கொரோனா நோய்த்தொற்றல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் பலரும் தங்களால் இயன்ற வகையில் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு முயற்சி எடுத்துவருகின்றனர். சில குறிப்பிட்ட இடங்களில் நேரடியாகச் செல்ல முடியாத சூழலில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டும் சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்களின் உதவி மிக முக்கியமானது.

‘அஜித் பங்களிப்பில் கொரோனா ஒழிப்பு பணி’ டாக்டர் கார்த்திக் நாராயணன் தகவல்!

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மருத்துவர் கார்த்திக் நாராயணன், ‘ட்ரோன்கள் மூலம் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் ஐடியாவை நடிகர் அஜித் குமார்தான் சொல்லியதாகக் கூறினார். இந்த யோசனை கூறியதற்காக அஜித்க்கு நன்றி தெரிவித்தார். மேலும், அஜித் குமார் ஆலோசகராக இருந்து பயிற்சி அளிக்கும் தக்‌ஷா குழுவினர் இந்தப் பணியில் மிகச் சிறப்பான உதவிகளைச் செய்துவருவதாகவும் திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்முறையில் இருப்பதாகவும் கார்த்திக் நாராயணம் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்‌ஷா’குழு தமிழக அரசுடன் இணைந்து ட்ரோன் மூலம் சென்னையில் கிருமி நாசினிகளை தெளித்து வருகிறது. இதனிடையே ட்ரோன்களின் திறனை அதிகரிக்க முடிவு செய்த தக்‌ஷா குழு அதற்காக பல்வேறு மாற்றங்களை ட்ரோன்களில் செய்துள்ளனர். அதன்படி 16 லிட்டர் அளவிற்கு கிருமி நாசினிகளை சுமந்து செல்லும் வகையில் தக்‌ஷா குழுவினர் மேம்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் கிருமி நாசினி தெளிக்க முடியும்.  இந்த மேம்படுத்தப்பட்ட ட்ரோன்களின் சோதனை ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.

‘அஜித் பங்களிப்பில் கொரோனா ஒழிப்பு பணி’ டாக்டர் கார்த்திக் நாராயணன் தகவல்!

பொதுவாக அஜித் குமார் விளம்பரம் செய்துகொள்ளாது பல நல்ல விஷயங்களைச் செய்வார் என்ற பேச்சு உண்டு. இப்போது அது நிஜமாகியுள்ளது. கொரோனா நிவாரண நிதியாகப் பிரதமர் நிவாரண நிதிக்கும் 50 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், ஃபெப்ஸி ஊழியர்களுக்கு 25 லட்ச ரூபாயும் அஜித் குமார் வழங்கியிருப்பது குறிப்படத்தக்கது.

https://twitter.com/Atlee_Director1/status/1275785518656008193

அஜித்குமாரின் இந்தப் பங்களிப்பையும் தக்‌ஷா குழுவினரையும் இயக்குநர் அட்லி பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அட்லியைத் தொடர்ந்து, திரெளபதி பட இயக்குநர் மோகன், நடிகை சதா உள்ளிட்டோரும் அஜித் குமாரைப் பாராட்டி ட்விட் செய்துவருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் #AJITHLedDroneToFightCorona எனும் ஹேஷ்டேகை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.