அயோத்தி பயணம்! கொரோனா வைரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளாரா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கேள்வி

அயோத்தி பயணம்! கொரோனா வைரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளாரா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கேள்வி

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பிரதமர் நரேந்திர மோடியின் அயோத்தி பயணம், பக்ரீத் பண்டிகை கொண்டாட மகாராஷ்டிரா விதித்துள்ள கட்டுப்பாடுகளை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக அயோத்தியில் நீங்க ராமர் கோயில் கட்ட போறீங்க, அதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், முன்னுரிமைகள் என்னவா இருக்க வேண்டும் என்பது இந்த நாட்டின் பிரதமருக்கு தெரியாதா?

அயோத்தி பயணம்! கொரோனா வைரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளாரா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கேள்வி

அயோத்திக்குள் நுழைய மாட்டேன் என்று கொரோனா வைரஸ் பிரதமர் மோடியுடன் ஒரு உடன்படிக்கை செய்துள்ளதா? பிரதமருக்கு கூட அவரது முன்னுரிமைகள் தெரியாவிட்டால் மற்றவர்கள் மீது நீங்கள் எவ்வாறு விதிகளை விதிக்க முடியும்? இது மிகவும் அபத்தமானது. மகாராஷ்டிரா அரசு பக்ரீத் பண்டிகை அன்று அடையாள தியாகமாக கொண்டாடும்படி கூறுகிறது. அடையாள தியாகம் என்றால் என்ன? இப்போது நமது பண்டிகைகளுக்கு மாநில அரசு உத்தரவு போட முடியாது. எல்லாவற்றையும் திறந்துவிடும்போது இன்னும் வழிபாட்டு தலங்கள் ஏன் மூடப்பட்டுள்ளன?

அயோத்தி பயணம்! கொரோனா வைரசுடன் பிரதமர் மோடி ஒப்பந்தம் போட்டுள்ளாரா? ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கேள்வி

உத்தர பிரதேசத்தில், பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்கு வசதியாக முதல்வர் யோகி ஆதித்யநாத் வாரஇறுதி லாக்டவுன் விதிமுறைகளை ஆகஸ்ட் 1ம் தேதி தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதிகளில் பண்டிகை கொண்டாடுவதற்காக சிறப்பு விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டது. அந்த விதிமுறைகளின்படி, மசூதிக்கு சென்று தொழுகை செய்வதற்கு பதிலாக வீட்டில் தொழுகை மேற்கொள்ள வேண்டும். குர்பானி விலங்குகளை ஆன்லைனில் அல்லது தொலைப்பேசியில் வாங்க வேண்டும். குர்பானி அல்லது விலங்கு பலியிடப்படும் சடங்கை முடிந்தால் அடையாள தியாகமாக மேற்கொள்ளவும் எனவும் மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.