உங்க தலைமுறை வேண்டுமானால் முடியலாம்… ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்

உங்க தலைமுறை வேண்டுமானால் முடியலாம்… ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்

உங்க முழு தலைமுறை முடியலாம். ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது என்று யோகி ஆதித்யநாத்துக்கு அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.

ஹைதராபாத் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது யோகி ஆதித்யநாத் பேசுகையில், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயரை பாக்யநகர் என்று மாற்றுவோம். உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத போது ராம் ஜென்மபூமி மாவட்டத்தின் பெயர் பைசாபாத் என்று மாற்றப்பட்டது. நாங்கள் வந்தோம், அயோத்தியா என்று பெயர் வழங்கினோம்.

உங்க தலைமுறை வேண்டுமானால் முடியலாம்… ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்
அசாதுதீன் ஓவைசி

பைசாபாத் அயோத்தியாகவும், அலகாபாத் பிரயக்ராஜ்யாகவும் மாறும் என்றால் ஹைதராபாத்தும் பாக்யநகராக மீண்டும் மாறும் என்ற தெரிவித்தார். ஹைதராபாத் பெயர் மாற்றம் தொடர்பான யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: உங்கள் முழு தலைமுறை முடியும் ஆனால் ஹைதராபாத்தின் பெயர் தொடர்ந்து ஹைதராபாத்தாக இருக்கும்.

உங்க தலைமுறை வேண்டுமானால் முடியலாம்… ஆனால் ஹைதராபாத் பெயரை மாற்ற முடியாது.. ஓவைசி ஆவேசம்
பா.ஜ.க.

இந்த தேர்தல்கள் ஹைதராபாத் மற்றம் பாக்யநகர் இடையிலானது. ஹைதராபாத் பெயர் மாற்றக்கூடாது என்று நீங்கள் விரும்பினால் மஜ்லிஸூக்கு (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) வாக்களியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஹைதரபாத் மாநகராட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 74 லட்சத்துக்கு அதிகமான ஹைதரபாத் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.