85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள்.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள்.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள் என்பதற்கு ஆதாரமான தரவுகள் எங்களிடம் உள்ளது என எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார்.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பார்த்து பொதுமக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர். ஆனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் எந்த குறிப்பிட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் குணம் அடைவார்கள் என மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியை எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள்.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் (கோப்புப்படம்)

நாராயணா ஹெல்த் தலைவர் டாக்டர் தேவி ஷெட்டி, மெதாந்தா தலைவர் நரேஷ் டிஹென் ஆகியோருடன் எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இணைந்து கோவிட்-19 பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: கோவிட்-19ல் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ரெம்டேசிவிர், ஸ்டிராய்ட்ஸ் அல்லது வேறு எந்த மருந்துகளின் வடிவத்திலும் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பதற்கான போதுமான தரவு இப்போது எங்களிடம் உள்ளது.

85 சதவீதத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லாமல் குணமடைவார்கள்.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
ரெம்டேசிவிர்

அவர்களில் ஜலதோஷம், காய்ச்சல், புண் போன்ற அம்சங்கள் இருக்கும். சிலருக்க இரப்பை அழற்சி ஏற்படலாம். 5 முதல் 7 நாட்களில் அவை வெறும் அறிகுறி சிகிச்சையால் குணமடைவார்கள். அதாவது பாராசிட்டமால்,உங்களை நீரேற்றமாக வைத்திருத்தல், வழக்கமான உடற்பயிற்சி, வைட்டமின்களை எடுத்துக்கொள்வது மற்றும் தங்களது உடல் நலம் குறித்து நேர்மறையான எண்ணத்தில் இருப்பது போன்றவற்றின் மூலம் குணமடைவார்கள். ஆக்சிஜன் செறிவு வீழ்ச்சியடையக்கூடிய மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட்டால் நாங்கள் சொல்லும் மிதமான நோய் பாதிப்பில் 15 சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். நோய் அதிகரிப்பதற்கான பிற அம்சங்களை கொண்ட அந்த சதவீத மக்களுக்கு மட்டுமே நாங்கள் ரெம்டேசிவிர், ஸ்டெராய்டுகள், ஆண்டிகோகுலண்டுகள் வடிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். சில சமயங்களில் பிளாஸ்மாவையும் தருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.