அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை – ஆர்.பி.உதயகுமார்

 

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை –  ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை –  ஆர்.பி.உதயகுமார்

மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி உதயகுமார் மதுரை திருமங்கலம் அருகே நடந்த மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் எடப்பாடிபழனிசாமி. திமுக முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் போய்ச்சேரவில்லை –  ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற தேர்தலில் திமுக – அதிமுகவுக்கு இடையே மூன்று சதவீத வாக்குகள் தான் வித்தியாசம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிமுக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் திமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற தேர்தலில் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் உண்மையில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கிடைத்தது என்றால் அது அதிமுகவுக்கு தான்; திமுகவுக்கும் இல்லை. திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டதுதான் அதிமுக தோல்விக்கு காரணம் . அதிமுகவின் வாக்குறுதிகள் மக்களிடம் முழுமையாக சேர்க்கப்படவில்லை. அதிமுகவை அழிப்போம் ;இரட்டை இலையை முடக்குவோம்; அதிமுகவை கைப்பற்றுவோம் என்று சிலர் நினைத்தார்கள். உலகிலேயே ஒரு கட்சியை அழிக்க தொடங்கப்பட்ட கட்சி இன்று முகவரி இழந்து நிற்கிறது” என்று தினகரனை சாடினார்.