28 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கல்வி ஊக்கத்தொகை!

 

28 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கல்வி ஊக்கத்தொகை!

அதிமுக சார்பில் 28 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

28 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கல்வி ஊக்கத்தொகை!

அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றினார். அத்துடன் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

28 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் கல்வி ஊக்கத்தொகை!

இந்நிலையில் மருத்துவம், பொறியியல் படிக்கும் 28 மாணவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.26.39 லட்சம் கல்வி ஊக்கத்தொகை தரப்பட்டது. அதிமுகவின் 49 ஆவது ஆண்டுவிழாவில் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றிய பின் நிதியுதவியை வழங்கினார் ஓ.பன்னீர்செல்வம். தொடக்கவிழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.