முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? இன்று அதிமுக செயற்குழு கூட்டம்!

 

முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? இன்று அதிமுக செயற்குழு கூட்டம்!

அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று காலை 9.45 மணிக்கு தொடங்கவிருக்கிறது.

அண்மைக்காலமாக அதிமுகவில் உள்கட்சி பிரச்னை கிளம்பியுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? அல்லது பன்னீர் செல்வமா? என்பதில் அதிமுக உறுப்பினர்களிடையே மோதல் நிலவி வருகிறது. பெரும்பாலும் எடப்பாடி தான் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில், ஓபிஎஸ் அணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதாம். இது ஒரு புறமிருக்க சசிகலா விடுதலை அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கபபடுகிறது.

முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? இன்று அதிமுக செயற்குழு கூட்டம்!

இந்த நிலையில் தான், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடுகிறது. இதில் 300க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். தமிழக அரசியல் நிலவரம், சட்டமன்ற தேர்தல், கட்சி வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன. முக்கியமாக முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கு இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும், சசிகலாவை பற்றி இந்த கூட்டத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், நேற்று திடீரென ஓபிஎஸ் மதுசூதனனை சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியது கவனிக்கத்தக்கது.