பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடுகிறது!

 

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடுகிறது!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. மாவட்டந்தோறும் பரப்புரை செய்து வரும் முதல்வர் பழனிசாமி 3வது முறையாக ஆட்சியை அமைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடுகிறது!

அதேசமயம் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது ஏற்கனவே தெரிந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் முதல்வர் பழனிசாமி என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார். அதேபோல் முதல்வர் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்களுடன் தான் கூட்டணி என அதிமுக அமைச்சர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடுகிறது!

இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அதிமுக, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை 8.50 மணி அளவில் தொடங்கவுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர் . இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்ட நிலையில், கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் கூட்டத்திற்கு வரவும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுகவினர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு இன்று கூடுகிறது!

அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என்றும் தேர்தல் கூட்டணி, எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது பற்றியும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.