அதிமுக நிர்வாகி கொலை : திமுக நிர்வாகி கைது!

 

அதிமுக நிர்வாகி கொலை : திமுக நிர்வாகி கைது!

கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த சூழலில் திருப்புவனம் அருகே வயல்சேரியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் மற்றும் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் என இரு கோஷ்டிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சக்திவேல் தரப்பினர், ராமகிருஷ்ணன் காரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதிமுக நிர்வாகி கொலை : திமுக நிர்வாகி கைது!

இதன் காரணமாக நடந்த மோதலில் திமுக கிளைச் செயலாளர் சக்திவேல் மனைவி முத்துப்பேச்சி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். அத்துடன் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் படுகாயமடைந்தார். இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்த நிலையில் சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிமுக நிர்வாகி கொலை : திமுக நிர்வாகி கைது!

இந்நிலையில் அதிமுக நிர்வாகி ராமகிருஷ்ணனின் தந்தை நாராயணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிமுக நிர்வாகி உயிரிழந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீயாக பரவ அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் தலைமறைவாக இருந்த சக்திவேல் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டநிலையில், அங்கு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதபடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.