அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.ஆர்.ராதா மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். ஆட்சியில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர்.ராதா(86) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று எஸ்.ஆர்.ராதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.ஆர்.ராதா மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

ம்ஜிஆர் அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய எஸ்.ஆர்.ராதா. இவரது மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் கூட்டாக இணைந்து இரங்கல் தெரிவித்துள்ளனர் .

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.ஆர்.ராதா மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் திமுக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா மறைவு செய்தியை கேட்டு துயருற்றேன். தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தவர். அன்னாரின் மறைவுக்கு இரங்கலையும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.