அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு!

 

அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவையில் தகராறில் ஈடுபட்ட அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாதிபதி செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு உரிய அனுமதி பெற்று வந்துள்ளார். அப்போது அவர் வாக்குசாவடியை பார்வையிட்டு சென்ற போது, அங்கிருந்த அதிமுக மற்றும் பாஜகவினர்,கார்த்திகேய சேனாதிபதியை தடுத்தி நிறுத்தினர். ”ஏன் இங்கு வந்தீர்கள்” தலையை வெட்டிவிடுவோம் என கார்த்திகேய சேனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கார்த்திகேய சேனாதிபதியை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அப்போது அவர் கார் மீது பாஜக – அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

அதிமுக, திமுகவினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு!

இதை தொடர்ந்து அங்கு வந்த திமுகவினர் அதிமுகவினருடன் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அவர்களுடன் போராட்டம் நடத்தினர். வேட்பாளரை ஏன் அனுமதிக்கவில்லை என போலீசாரிடம் திமுகவினர் வாக்குவாதம் செய்ததுடன் பேரணியாக நடந்து சென்று செல்வபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி அதிமுக, பாஜகவினர் தாக்க முயன்ற புகாரில் 200 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வாக்குச்சாவடிக்கு அதிமுக கொடி மற்றும் துணையுடன் சென்ற புகாரில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.