பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று கூடுகிறது!

 

பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று கூடுகிறது!

வருகின்ற 27 ஆம் தேதி சென்னை மெரினாவில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட உள்ளது. அன்றைய நாளில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார். அதேவேளையில் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பினார். இந்த சந்திப்பில் பாஜக – அதிமுக கூட்டணி இடையேயான தொகுதிப் பங்கீடு மற்றும் சசிகலா வருகை உள்ளிட்டவை பற்றி பேசபட்டதாக கூறப்படுகிறது. சசிகலா வருகை உறுதியாகியுள்ள நிலையில், அவரை அதிமுகவில் 100% இணைக்க வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று கூடுகிறது!

இந்நிலையில் பல்வேறு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடத்துகின்றனர். மாவட்ட செயலாளர்களுடன் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர். சிறையில் இருந்து சசிகலா விடுதலை, சட்டமன்ற தேர்தல் கூட்டணி , ஜெயலலிதா நினைவிடம் திறப்பு பற்றி ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.