அதிமுகவை சசிகலாவால் கைப்பற்ற முடியாது – ஓபிஎஸ் திட்டவட்டம்!

 

அதிமுகவை சசிகலாவால்  கைப்பற்ற முடியாது – ஓபிஎஸ் திட்டவட்டம்!

அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்று சசிகலா குறித்த கேள்விக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

அதிமுகவை சசிகலாவால்  கைப்பற்ற முடியாது – ஓபிஎஸ் திட்டவட்டம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பிறகு சசிகலா அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதிமுகவில் மீண்டெடுப்பேன்; அதிமுகவுக்கு தலைமை தாங்குவேன் என்று சசிகலா பேசிவருவது அதிமுகவுக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சசிகலாவுடன் தொடர்பில் உள்ளவர்களை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரால் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர் . இது குறித்து அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டணி சசிகலா குறித்து பேசியதாகவும் செய்திகள் வெளியாகின.

அதிமுகவை சசிகலாவால்  கைப்பற்ற முடியாது – ஓபிஎஸ் திட்டவட்டம்!

இந்த சூழலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆட்சி அமைத்த திமுக அரசை எதிர்த்து அதிமுகவினர் என்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் பன்னீர்செல்வம் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிமுகவை சசிகலாவால்  கைப்பற்ற முடியாது – ஓபிஎஸ் திட்டவட்டம்!

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் போடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், ஆடியோ வெளியிட்டுவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது தனிப்பட்ட நபரோ குடும்பமா கட்சியை வழிநடத்த முடியாது. தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை அதிமுகவில் உள்ளது. ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது. என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. தற்போதைய நிலை தொடரும். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம். அதிமுகவுக்கு துரோகம் செய்தவர் தங்க தமிழ்ச் செல்வன்; ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மறுத்தவர். மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை; பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.