நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

 

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

அதிமுக- பாஜக தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் மேலிடத்தின் தூண்டுதலால் நடக்கிறதா என்ற சந்தேகம் எழுக்கிறது. அதே நேரத்தில் தமிழக அரசை திடீரென பாராட்டும் ரஜினி, யார் பக்கம் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டது கிடையாது. முக்கிய கட்சியான திமுகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துதான் போட்டியிட்டு வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போது ஜெயலலிதா இறந்துபோனார். அவர் இருக்கும்போது முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் சிறிய கட்சிகளுடன்தான் போட்டியிட்டார் ஜெயலலிதா. அவரது மறைவுக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட்டது அதிமுக. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தனித்து நின்று போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்று வந்த பாஜக, கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. இதனால், அதிமுகவினர் மீது பாஜக கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். அவ்வப்போது, தமிழக அரசின் தவறை சுட்டிக்காட்டி வரும் பாஜக, தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறது.

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இல்லையேல் வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்றும் ஓப்பனாக பேசினார்.

அதிமுக வின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் பாரதிய ஜனதாவின் இந்த கருத்து குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கும் நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்து எடுபடாது என்றும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்பதை அவர் கண்ணாரக் காண்பார் என்றும் பதிலடி கொடுத்தார்.

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

சி.பி.ராதாகிருஷ்ணனின் கருத்தை ஆமோதித்த தமிழக பாஜக தலைவர் முருகன், அதிமுக வெற்றி பெறாது எனில், ரஜினி மாற்றாக இருப்பாரா என்ற கேள்விக்கு, ஆம் என்று பதில் அளித்தார். மேலும், தமிழகத்தில் பாஜக பங்கேற்கும் கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் என்றார் அதிரடியாக. அதே நேரத்தில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கூறிய முன்னாள் அதிமுக எம்.பி. அன்வர் ராஜா, தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக்கொண்டுள்ள கட்சி அதிமுக என்றும் மீண்டும் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றும் குண்டை தூக்கிப்போட்டார்.

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

இதனிடையே, கந்தசஷ்டி விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை திடீரென பாராட்டினார் ரஜினிகாந்த். “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்” என்பது ரஜினிகாந்த் ட்வீட். இதனிடையே, “கந்தசஷ்டி விவகாரத்தில் ரஜினி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார் என வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஓராண்டுக்கு குறைவாவே உள்ள நிலையில், இப்போதே அரசியல் அனல் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி அரசு அமையும் என அக்கட்சியின் மாநிலத்தலைவர் முருகன் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக மீதான சி.பி.ராதாகிருஷ்ணனின் விமர்சனம் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

அதேநேரத்தில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பாஜக தற்போதே செயல்படத் தொடங்கி விட்டதாகக் கூறும் அரசியல் விமர்சகர்கள், அதிமுகவிற்கு மாற்றாக தமிழகத்தில் ஒரு தலைமையை உருவாக்க பாஜக விரும்புவதையே இது காட்டுவதாகவும், கூட்டணியில் இருந்தாலும் பரஸ்பரம் தேசியக்கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் விமர்சிப்பது தொடர்ந்து நிகழ்வதுதான் . இவை மட்டுமே கூட்டணி மாற்றத்திற்கான அறிகுறிகள் அல்ல என்றும் கூறுகின்றனர்.

நெருங்கி வரும் தேர்தல்… அதிமுக- பாஜகவுக்குள் திடீர் விரிசல்… ரஜினியின் பாராட்டு!- என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?

இதனிடையே, ரஜினி முதல்வர் ஆனால் மட்டுமே தமிழகம் உருப்படும் என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், பாஜக விற்குள் இருந்து அதிமுக வின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் கூடுதல் கவனத்தைப்பெறுகின்றன. எது எப்படியோ தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ரஜினியை அதிமுக இழுக்குமா? பாஜக இழுக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.