தடுப்புகள், வேலிகள்… பாதுகாப்பு வளையத்தில் வெள்ளை மாளிகை – 9/11 அட்டாக்கிற்கு பின் வரலாறு கண்டிராத பாதுகாப்பு!

தடுப்புகள், வேலிகள்… பாதுகாப்பு வளையத்தில் வெள்ளை மாளிகை – 9/11 அட்டாக்கிற்கு பின் வரலாறு கண்டிராத பாதுகாப்பு!

9/11 இரட்டைக் கோபுர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் அமெரிக்க மக்கள் கண்டிராத வகையில் பைடனின் பதவியேற்பு விழாவுக்காக வாசிங்டனில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படையினர் 50 மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் (ஜன.20) பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடவிருக்கிறார்கள்.

தடுப்புகள், வேலிகள்… பாதுகாப்பு வளையத்தில் வெள்ளை மாளிகை – 9/11 அட்டாக்கிற்கு பின் வரலாறு கண்டிராத பாதுகாப்பு!

இந்த விழாவில் அசாம்பாவிதங்கள் அரங்கேற்விருப்பதாக உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புகள், வேலிகள் அமைக்கப்பட்டு வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்துக்குள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பகுதியில் வரும் வாகனங்கள், நபர்கள் அனைவரும் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு படையினர் இரவு பகல் பாராமல் கண் விழித்து பணி செய்துவருகின்றனர்.

தடுப்புகள், வேலிகள்… பாதுகாப்பு வளையத்தில் வெள்ளை மாளிகை – 9/11 அட்டாக்கிற்கு பின் வரலாறு கண்டிராத பாதுகாப்பு!

அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றிக்கு எதிராக வழக்குகள் தொடர்ந்து தோல்வியடைந்தார் அதிபர் டிரம்ப். இதனால் விரக்தியடைந்த அவர் தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டதையடுத்து, ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர்.

தடுப்புகள், வேலிகள்… பாதுகாப்பு வளையத்தில் வெள்ளை மாளிகை – 9/11 அட்டாக்கிற்கு பின் வரலாறு கண்டிராத பாதுகாப்பு!

இதேபோல பதவியேற்பு விழாவிலும் வன்முறை கட்டவிழ்த்துவிடப் படலாம் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததால் டிரம்பின் கணக்குகளை பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.