விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய ஆலோசனைகள் என்ன என்ன என்பது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாடு சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான சட்டத்தை இயற்றினார். இதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்துவது என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

இந்த அரசாணையில் அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த வேளாண் துறை தமிழக வேளாண் பல்கலைக் கழகத்துடன் விரிவான ஆலோசனை நடத்தி திட்ட அறிக்கையை பாதுகாப்பு மண்டல ஆணையத்துக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாரணையில், “விவசாயத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வேளாண் துறையானது வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் சந்தைப்படுத்துதல் துறையுடன் விரிவான ஆலோசனை நடத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செய்ய வேண்டியது பற்றிய விரிவான அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக வழங்க வேண்டும்.

விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

வேளாண் துறை வழங்கும் அறிக்கையானது முழுக்க முழுக்க ஆராய்ச்சி அடிப்படையிலானதாக, விவசாயத்தை, தோட்டக்கலையை, அது தொடர்பான துறைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் பற்றிய அறிக்கையை ஒவ்வொரு அரையாண்டிலும் வழங்க வேண்டும். அதாவது, ஜூன் 30 மற்றும் டிசம்பர் 31ம் தேதி இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆணையமானது இந்த மண்டலத்தின் நலம், தண்ணீர் சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட மண்டலத்தின் விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்கும் வழிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளை பரிந்துரைக்க வேண்டும். இந்த பகுதியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக தொடங்கப்பட வேண்டிய வேளாண் சார்ந்த தொழிற்துறைகளைப் பரிந்துரைக்க வேண்டும்.

விவசாயம், விவசாயியின் மேம்பாடு மட்டுமே குறிக்கோள்… வேளாண் பாதுகாப்பு மண்டலம் காட்டும் வழிகாட்டுதல்!

தொழில்நுட்ப ஆய்வுக் குழுவின் தலைவராக வேளாண் உற்பத்தி ஆணையர் இருப்பார். வேளாண் துறை இயக்குநர் உறுப்பினர் செயலராகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், தொழில் மற்றும் வர்த்தக இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு வோளாண் பல்கலைக் கழக இயக்குநர் (ஆராய்ச்சி) ஆகியோர் உறுப்பினர்களாக (அலுவல் சாரா பணி) இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.