விவசாய கடன் தள்ளுபடி – தஞ்சை ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்

 

விவசாய கடன் தள்ளுபடி – தஞ்சை ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்

தஞ்சாவூர்

விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததற்கு நன்றி தெரிவித்து, தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தின்போது, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும், ஆட்சியர் கோவிந்த ராவுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

விவசாய கடன் தள்ளுபடி – தஞ்சை ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாட்டம்

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் விவசாய சங்க பிரதிநிதிகள், மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிக்கும் விதமாக கருப்பு துண்டு அணிந்து வந்திருந்தனர்.

தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெற செய்ய வலியுறுத்தி அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.