இன்னும் இரண்டு நாட்களில் கத்திரி வெயில் நிறைவு.. 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் கத்திரி வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இது போதாதென்று, வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் இருக்கும் ஈரப்பதம் அனைத்தையும் இழுத்து சென்று விட்டது. இதனால் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களில் கோவை, திருப்பத்துார், திருவண்ணாமலை, தேனி, தென்காசி,நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலுார், ராணிப்பேட்டை, கரூர், ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அனல்காற்று வீசும் என்றும் மக்கள் வீட்டை விட்டு மாலை 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் நாளை மறுநாளுடன் நிறைவடைவதால் வெப்பம் சற்று அதிகரித்தே காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

திருச்செந்தூர் அருகே 7 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு! அதிர்ச்சி தகவல்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது கல்வலை கிராமம். இந்தக் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள காட்டுப் பகுதியில் 7 வயதுள்ள ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர்...

சென்செக்ஸ் 19 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்த வாரத்தின் 3வது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் படிப்படியாக சரிவு...

வெளிநாட்டில் உள்ளவர்களுடன் முருகன் பேச மத்திய அரசே அனுமதிக்க வேண்டும்! – தமிழக அரசு வாதம்

வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடம் ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் முருகன் பேச வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் காந்தி...

“தாலி வேணாம் ,ஜாலி போதும்” -கட்டிக்க மறுத்த காதலி-வெட்டி வீதியில் வீசிய ரவுடி..

தாலி கட்டிக்க மறுத்த காதலியை, ரோட்டிலேயே காதலன் அறுத்து கொலை செய்த சம்பவம் சவுத் பெங்களூரு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சவுத் பெங்களூருவில் உள்ள கிரிநகரில் இருப்பவர் அபி கௌடா .இவர் மீது பல...
Open

ttn

Close