பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம் : தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் சொன்ன அறிவுரைகள்!

1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கும் மற்றும் 5 வாரங்களுக்கு பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் என பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம்.

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடைசி கல்வியாண்டே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை மாதம் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர்கள், கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வரும்வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதுவொருபுறமிருக்க தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலிடம்(என்.சி.இ.ஆர்.டி.) பள்ளிகள் திறப்பு மற்றும் அதன்பின்பு பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துகளை தெரிவிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி என்.சி.இ.ஆர்.டி பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிமுறைக்களை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவை பின்வருமாறு:-

  • முதற்கட்டமாக பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு பிறகு 9, 10-ம் வகுப்புகளுக்கும், 2 வாரங்களுக்கு பின் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், 3 வாரங்களுக்கு பிறகு 3 முதல் 5-ம் வகுப்புகளுக்கும், ஒரு மாதத்துக்கு பின் 1 மற்றும் 2-ம் வகுப்புகளுக்கும் மற்றும் 5 வாரங்களுக்கு பிறகு நர்சரி வகுப்புகளுக்கும் என பள்ளிகளை 6 கட்டங்களாக திறக்கலாம்.
  • வகுப்பில் 30 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்க வேண்டும் . அவர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி தூரம் இருத்தல் வேண்டும்
  • வகுப்பில் ஏசி இருக்க கூடாது
  • மாணவர்கள் தங்களுக்குள் உணவு பண்டங்கள், குடிநீரை பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் வேண்டும்

  • மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும்
  • மாணவர்கள் மற்றவர்களின் நாற்காலி, மேசையில் அமர கூடாது.
  • திறந்தவெளியில் வகுப்புகள் நடத்துவது நல்லது
  • காலை இறைவணக்கத்துக்கு அனுமதிக்கக்கூடாது.
  • பள்ளிக்கு வெளியே உணவு நிலையங்கள் இருக்கக்கூடாது.
  • ஆசிரியர்களை பெற்றோர் சந்திக்க கூடாது. செல்போனில் பேச வாய்ப்பில்லாத பட்சத்தில் மட்டுமே நேரில் சந்திக்கலாம்.

Most Popular

புழல் வாடகை பிரச்னையால் தற்கொலை விவகாரம்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்

புழலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்ததால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த புழல் விநாயகபுரத்தைச்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 10,268 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்...

`முகக்கவசம் அணிவதில்லை; அலட்சியமாக இருக்கிறார்கள்!’- திருச்சி மக்கள் மீது ராதாகிருஷ்ணன் வருத்தம்

திருச்சி மற்றும் பல பகுதிகளில் பொதுமக்கள் முக கவசம் அணிவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் மிக அலட்சியமாக இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளார் ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று...