பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாயவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கும் அகாலி தளம்

 

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாயவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கும் அகாலி தளம்

எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு பகுஜன் சமாஜ் கட்சி, சிரோன்மணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளது.

பஞ்சாபில் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசின் ஆட்சி காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நிறைவடைய உள்ளது. இதனால் மொத்தம் 117 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் 2022 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாயவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கும் அகாலி தளம்
தேர்தல்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பஞ்சாபில் செல்வாக்கு மிக்க கட்சியான சிரோன்மணி அகாலி தளம் எதிர்வரும் தேர்தலை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து சந்திக்கிறது. 25 ஆண்டுகளுக்கு பிறகு சிரோன்மணி அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதற்கு முன் 1996ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த கட்சிகள் கூட்டணி வைத்து 13 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு மாயவாதி கட்சியுடன் கூட்டணி வைக்கும் அகாலி தளம்
மாயாவதி

எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் சிரோன்மணி அகாலி தளத்துடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க இருப்பது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி கூறுகையில், இது புதிய அரசியல் மற்றும் சமூகத்துக்கான ஆரம்பம் மற்றும் வரலாற்று நடவடிக்கை. காங்கிரஸ் ஆட்சியின்கீழ் பஞ்சாபில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பகுதியும் வறுமை, ஊழல் மற்றம் வேலையின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது, தலித்துக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டணியை வெற்றி கூட்டணியாக மாற்றுவது முக்கியமானது. இந்த வரலாற்று கூட்டணிக்கு பஞ்சாப் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.