2 மாதங்களுக்கு மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து…

 

2 மாதங்களுக்கு மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து…

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. அது முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. விமானங்கள் அனைத்தும் விமான நிலையங்களில் எந்தவொரு சத்தமும் இல்லாமல் நிம்மதியாக ஓய்வு எடுத்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது.

2 மாதங்களுக்கு மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து…

அதன்படி, 2 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் உள்நாட்டில் விமான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. விமான பணியாளர்கள் ஆர்வமுடன் பணிக்கு திரும்பினர். கொரோனா வைரஸ் காரணமாக குறைந்த அளவிலான பயணிகள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். விமான நிலையங்களில் பயணிகள் சமூக விலகலை கடைப்பிடித்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து முதல் விமானம் மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்றடைந்தது.

2 மாதங்களுக்கு மீண்டும் தொடங்கியது உள்நாட்டு விமான போக்குவரத்து…

அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கூறுகையில், விமானத்தில் ஏறுவதற்கு முன் பதற்றமாக இருந்தது. ஆனால் பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மிகவும் குறைந்த அளவிலேயே இப்போது மக்கள் பயணம் செய்கிறார்கள் என தெரிவித்தார்.