“advocate”டிடமே   ஆன்லைனில் ஆட்டைய போட்ட “அப்பாடக்கர்” – just dial  மூலம் just  பத்தாயிரத்தை இழந்த பரிதாபம்-

 

“advocate”டிடமே   ஆன்லைனில் ஆட்டைய போட்ட “அப்பாடக்கர்” – just dial  மூலம் just  பத்தாயிரத்தை இழந்த பரிதாபம்-

பெங்களூருவில், மதிக்கரே பகுதியில் 37 வயதான வக்கீல் சஞ்சீவ் என்பவர் தன்னைப்பற்றிய முழு விவரங்களையும்  just dial லில் பதிவு செய்திருந்தார் .அபிஷேக் என்ற நபர் டிசம்பர் 19 ன் தேதி அன்று அவரை தொடர்பு கொண்டு தன் நண்பருக்கு திருமண பதிவு சம்பந்தமான விவரங்கள் வேண்டுமெனவும் ,அதற்காக டாக்குமெண்ட் விவரங்களை தருமாறு கேட்டார்

jd

.உடனே வக்கீல் தன்னைப்பற்றிய விவரத்தையும் அதற்கான கட்டண விவரத்தையும் எந்த அக்கவுண்டுக்கு பணம் அனுப்பவேண்டுமெனவும் கூறிக்கொண்டிருக்கும்போது அவரது கணக்கிலிருந்து 10000 ரூபாயை அந்த அந்த நபரின் கணக்கிற்கு இவரது அக்கௌன்ட்டிலிருந்து போனது கண்டு அதிர்ச்சியுற்றார் .

crime

திரும்ப அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாமல் விழித்த வக்கீல் சஞ்ஜீவ் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,இதுபோல ஆன்லைனில் மோசடிகள் நிறய நடந்து வருவதாகவும் ,மக்கள்தான் எச்சரிக்கையாக இருந்து தங்கள் வங்கி கணக்கு எண்ணை யாரோடும் ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள வேண்டாமென கேட்டுக்கொண்டார்.ஆன்லைன் கொள்ளையர்கள் சில நவீன தொழில்நுட்பத்தின்மூலம் இப்படி பணத்தை எடுக்கிறார்கள் என தெரிவித்தார் .