பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

பல இந்துக்களின் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, நேற்று நிஜமானது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைகளோடு நேற்று தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்காததால் சிவ சேனா கொஞ்சம் ஜெர்க்காகி உள்ளது. அதேசமயம், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு பங்கு இருக்கிறது என நேற்று சாமனா பத்திரிகையின் கட்டுரையில் சிவ சேனா தெரிவித்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

மேலும் அந்த பத்திரிகையில் ஒரு சர்ச்சைக்குரிய விளம்பரமும் வெளிவந்தது. அந்த விளம்பரத்தில் பாபர் மசூதி இடிப்பு படமும், மறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரே, முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த செயலை செய்த மனிதர்கள் குறித்து பெருமை அடைகிறேன் என்ற பால் தாக்கரேவின் வாசகமும் இடம் பெற்று இருந்தது. தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விளம்பரத்தை சிவ சேனாவின் செயலாளர் மிலிந்த் நர்வேகர் செய்து இருந்தார்.

பாபர் மசூதி இடிப்பு, பால் தாக்கரே படத்துடன் சாமனா பத்திரிகையில் விளம்பரம்.. சர்ச்சையை கிளப்பிய சிவ சேனா..

சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அயோத்தியில் கொரோனா வைரஸ் நிலவரம் மோசமாக இருப்பதால் ராமர் கோயில் பூமி பூஜைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே செல்லவாய்ப்பில்லை. பிரதமர் செல்வதுதான் முக்கியம். முதல்வர் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என தெரிவித்து இருந்தார். ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்குவதை குறிக்கும், பிரதமர் அடிக்கல் நாட்டுவது போன்ற வேறுஎந்த பொன்னான தருணமும் கிடையாது என கடந்த செவ்வாய்க்கிழமையன்று சாமனா பத்திரிகையில் சிவ சேனா தெரிவித்து இருந்தது.