ஆம்புலன்சில் காத்திருக்கும் பிணங்கள் -சாம்பலுக்கு அலையும் உறவினர்கள் –இறப்போருக்கு காரியம் கூட செய்ய விடாத கொரானா.

ஆம்புலன்சில் காத்திருக்கும் பிணங்கள் -சாம்பலுக்கு அலையும் உறவினர்கள் –இறப்போருக்கு காரியம் கூட செய்ய விடாத கொரானா.

கொரானாவால் இறப்போருக்கு அடக்கம் செய்ய சுடுகாடுகள் கிடைக்காததால் ,அவர்களுக்கு முறையாக காரியம் கூட செய்ய முடியாத அவல நிலை அரங்கேறியுள்ளது

ஆம்புலன்சில் காத்திருக்கும் பிணங்கள் -சாம்பலுக்கு அலையும் உறவினர்கள் –இறப்போருக்கு காரியம் கூட செய்ய விடாத கொரானா.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கொரானாவால் இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு சுடுகாடுகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது .அதனால் ஒவ்வொரு சுடுகாட்டின் வாசலிலும் ஆம்புலன்சில் பிணங்கள் அணிவகுத்து நிறைகின்றனர் .அதனால் இறந்தவர்களின் சாம்பலை சீக்கிரம் வந்து வாங்கிக்கொண்டு ,இறுதி மரியாதை மற்றும் காரியம் போன்றவற்றை முன்கூட்டியே வைத்து கொள்ளுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சிவபுரி தகன மைதானத்தை நடத்தி வரும் ஸ்ரீ துர்கியானா மந்திர் குழுவின் (எஸ்.டி.எம்.சி) தலைவர் ரமேஷ் சந்தே சர்மா, கூறுகையில் ,”ஒவ்வொரு நாளும் 40 க்கும் மேற்பட்ட சடலங்களை தகனம் செய்வதற்காக நாங்கள் பெற்றுக்கொள்கிறோம் . இறுதி சடங்குகளுக்காக இறந்த உடல்களின் வருகை அதிகரித்ததன் மூலம், இறந்தவர்களின் உறவினர்களுக்கு மூன்றாம் நாளில் அவர்களின் காரியத்தை செய்ய நாங்கள் அவர்களின் உறவுகளுக்கு தெரிவித்துள்ளோம் , இதனால் அடுத்த பிணத்தை தகனம் செய்வதற்கான இடம் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.
ஷம்ஷன் சேவா சமிதியின் (எஸ்.எஸ்.எஸ்) கிரிஷன் கோபால், “இறந்தவரின் உறவினர்களை இரண்டாவது நாளில் அவர்களது உறவினர்களின் சாம்பலை சேகரித்து, பாரம்பரியத்தின் படி அவர்களின் இறுதி சடங்குகளைச் செய்ய அவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”என்றார் .

ஆம்புலன்சில் காத்திருக்கும் பிணங்கள் -சாம்பலுக்கு அலையும் உறவினர்கள் –இறப்போருக்கு காரியம் கூட செய்ய விடாத கொரானா.