வந்தா வாங்க… இல்லன்னா விடுங்க! 13 தொகுதிதான்!! தேமுதிகவிடம் அதிமுக கறார்

 

வந்தா வாங்க… இல்லன்னா விடுங்க! 13 தொகுதிதான்!! தேமுதிகவிடம் அதிமுக கறார்

தொகுதி பங்கீட்டில் 40 தொகுதிகளை கேட்டு முதலில் அடம்பிடித்துவந்த தேமுதிக நாளடைவில் 23 தொகுதிகள் வரை கீழிறங்கி வந்தது. இறுதியாக 23 தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா சீட் வழங்க அதிமுகவிடம் தேமுதிக கேட்டுக்கொண்டது. ஆனால் அதிமுக அதற்கு ஒத்துழைக்கவில்லை இதனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அப்போது உடன்பாடு எட்டப்படவில்லை.

வந்தா வாங்க… இல்லன்னா விடுங்க! 13 தொகுதிதான்!! தேமுதிகவிடம் அதிமுக கறார்

இந்த சூழலில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இதனைடைய் தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 13 தொகுதிகளை ஏற்க தேமுதிக மறுத்து வருவதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவருகிறது.