முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கும் அதிமுக!

 

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கும் அதிமுக!

பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்ற முதல்வர் மு.க ஸ்டாலினின் அறிவிப்புக்கு அதிமுக வரவேற்பு அளித்துள்ளது.

இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பெரியாரின் பிறந்நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூகநீதி இருப்பதற்கு முக்கிய காரணம் அவரே. யாரும் எழுத தயங்கியதை, யாரும் பேச தயங்கியதை தைரியமாக எடுத்துரைத்தவர் பெரியார். சாதி ஒழிப்புப், பெண்ணடிமை ஒழிப்பு போன்றவையே பெரியாரின் இலக்கு. எனவே அவரைப் போற்றும் விதமாக அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கும் அதிமுக!

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு சட்டமன்றத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. கடவுள் நம்பிக்கையோடு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் பெரியாரின் பிறந்த தினத்தை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவிக்கிறது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இந்த நிலையில், அதிமுகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ வைத்தியலிங்கம், சாமானியனும் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளமிட்டவர் பெரியார். அதனால் முதல்வரின் அறிவிப்பை மனப்பூர்வமாக ஏற்கிறோம் என்று தெரிவித்தார்.