அதிமுகவுக்கு அடுத்தடுத்த சிக்கல்.. தென் மாவட்டங்களில் சரியும் வாக்கு வங்கி?

 

அதிமுகவுக்கு அடுத்தடுத்த சிக்கல்.. தென் மாவட்டங்களில் சரியும் வாக்கு வங்கி?

அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவின் கோரிக்கையை அண்மையில் முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வைத்தார். பாமக கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்றும் 6 மாதத்துக்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது பாமகவினரை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த நிலையில், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுகவுக்கு அடுத்தடுத்த சிக்கல்.. தென் மாவட்டங்களில் சரியும் வாக்கு வங்கி?

தேர்தல் பிரச்சாரங்களின் போது இதனை அதிமுகவினர் உணருகிறார்கள். மக்களை சமாளிக்கும் பொருட்டு, இந்த அறிவிப்பு தற்காலிகமானது தான் என அதிமுக அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்களோ அதை ஏற்பதாக இல்லை. சில இடங்களில் போராட்டங்களும் நடைபெறுகிறது. இந்த நிலையில், தென் மாவட்டங்களின் பல இடங்களில் தமிழ்நாடு அகமுடையார் முன்னேற்ற சங்ம் அதிமுகவுக்கு எதிராக போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறது.

அதிமுகவுக்கு அடுத்தடுத்த சிக்கல்.. தென் மாவட்டங்களில் சரியும் வாக்கு வங்கி?

அந்த போஸ்டர்களில், அகமுடையார் சமூகத்தின் வாக்குகளை பெற்று வளர்ந்த அதிமுகவே.. எங்கள் வாக்குகள் வேண்டாமென அறிவிக்கத் தயாரா? எங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது ஏன்? தென் மாவட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் துரோகம்.. விழித்தெழு இனிமே போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க ஆயத்தமாக இருக்கிறார். தற்போது இச்சமூகத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிமுகவின் வாக்கு வங்கி கேள்விக் குறியாகியுள்ளது…!