“மீண்டும் எடப்பாடி தான்; கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு”

 

“மீண்டும் எடப்பாடி தான்; கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு”

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்குவங்கம் தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மேற்கு வங்கத்தில் கடைசி மற்றும் எட்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றோடு முடிவடைந்தது. இதனால் நேற்று இரவு வரை 7 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

“மீண்டும் எடப்பாடி தான்; கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு”

வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே டைம்ஸ்நவ்-சிவோட்டர், ரிபப்ளிக், டுடே சாணக்யா, தந்தி டிவி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இதில் அனைத்து முடிவுகளிலும் திமுகவே அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என்று கூறியிருக்கிறார்கள். திமுக தனித்தே தனிப்பெரும்பான்மை பெறும் என்று கூறி அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் அதிமுக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

“மீண்டும் எடப்பாடி தான்; கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு”

இச்சூழலில் கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி அதிமுக அமோக வெற்றிபெறும் என அமைச்சர் ஜெயக்குமார் சூளுரைத்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வெளிவந்த கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு. அதேபோல இம்முறையும் கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும். அதில் எந்தச் சந்தேகமில்லை.

Image

இப்போது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருக்கும் அதே நிறுவனங்கள் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் தோற்போம் என்றன. ஆனால் நடந்தது என்ன நாங்கள் தான் ஆட்சியமைத்தோம். ஆகவே கருத்துக்கணிப்பு என்பதெல்லாம் கருத்து திணிப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது” என்றார். ஜெயக்குமார் சொல்வது உண்மை தான். ஆனால் கடந்த முறை பல நிறுவனங்கள் திமுக வெற்றிபெறும் என்று கூறியிருந்தாலும் “சிவோட்டர்” நிறுவனம் மட்டும் மீண்டும் அதிமுகவே வெற்றிபெறும் என்று கூறியிருந்தது.

“மீண்டும் எடப்பாடி தான்; கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கியதே அதிமுகவின் வரலாறு”
2016ஆம் ஆண்டு சிவோட்டரின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு


குறிப்பாக அந்நிறுவனம் சொன்ன இடங்களில் சரியாக அதிமுகவும் திமுகவும் வெற்றிபெற்றன. 2021 தேர்தலில் திமுக 166 இடங்களிலும் அதிமுக 64 இடங்களிலும் வெற்றிபெறும் என்று சிவோட்டர் கூறியிருக்கிறது. அதேபோல திமுகவுக்கு 46.7% வாக்குகளும் அதிமுகவுக்கு 35% வாக்குகளும் கிடைக்கும் என கணித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் 10% வாக்குகள். கடந்த காலங்களில் 10% வித்தியாசம் வந்த தேர்தல்களில் முறையே அதிமுகவும் திமுகவும் 200 இடங்களுக்கு மேல் வென்றிருக்கின்றன. இந்தக் காரணிகளையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. சிவோட்டர் நிறுவனத்தின் கருத்துக்கணிப்புகள் இதுவரை தோல்வியடைந்ததே இல்லை என்பது கூடுதல் தகவல்.