திமுக ஸ்லீப்பர்செல்ஸா? அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

திமுக ஸ்லீப்பர்செல்ஸா? அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

திமுக ஸ்லீப்பர்செல்ஸா? அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உள்ளிட்ட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்!

அதில், “கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்திலும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும் கடலூர் கிழக்கு மாவட்ட மகளிரணி துணை செயலரும், பண்ருட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சத்யா பன்னீர்செல்வம்,பண்ருட்டி நகரமன்ற முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், எம். பெருமாள், மார்ட்டின் லூயிக், சௌந்தர் மற்றும் ராம்குமார் ஆகியோர் இன்றுமுதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புமுதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.