அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் அ.தி.மு.க… ஐவர் குழு அவசர ஆலோசனை!

 

அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் அ.தி.மு.க… ஐவர் குழு அவசர ஆலோசனை!

அ.தி.மு.க-வில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்வது தொடர்பாக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு அவர் சிறை சென்ற பிறகு நீக்கப்பட்ட சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலையாகலாம் என்ற நிலை உள்ளது. இதனால் என்ன நடக்கும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பெருந்தலைகளே சசிகலா பக்கம் செல்லக்கூடும் என்ற பேச்சு நிலவுவதால் என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று தெரியாமல் நிர்வாகிகள் தடுமாறி வருகின்றனர்.

அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் அ.தி.மு.க… ஐவர் குழு அவசர ஆலோசனை!
இந்த நிலையில் அ.தி.மு.க -வில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் செய்வது குறித்து ஐவர் குழு இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி மற்றும் வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 4 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.

அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் அ.தி.மு.க… ஐவர் குழு அவசர ஆலோசனை!இந்த கூட்டத்தில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களை பிரிப்பது, புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது, கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த குழுவினர் அளிக்கும் பரிந்துரைகளை ஆய்வு செய்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இறுதி முடிவு எடுப்பர். இதனால், என்ன மாறுதல் நிகழும் என்ற எதிர்பார்ப்பில் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.