ஜெயலலிதா இல்லாத அதிமுகவுக்கு இந்த நிலைமையா?… இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் பொழிவிழக்கிறதா அதிமுக?

 

ஜெயலலிதா இல்லாத அதிமுகவுக்கு இந்த நிலைமையா?… இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் பொழிவிழக்கிறதா அதிமுக?

ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும்போது தேர்தலில் போட்டியிட தொண்டர்களால் விருப்ப மனு கொடுக்கப்படும்
நிகழ்வு திருவிழா போல நடைபெறும். அதேவேளையில் இறுதி வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடுவதற்கு முன்பாகவே பரபரப்பு தொற்றிவிடும். அவர் இருந்தபோது ஓபிஎஸ் தலைமையிலான ஐவர் குழுவை விருப்ப மனுக்களைப் பரிசீலனை செய்து நேர்காணல் நடத்துவார்கள். தேர்வானவர்களின் பட்டியலையும் ஜெயலலிதாவிடம் ஒப்படைப்பார்கள்.

ஜெயலலிதா இல்லாத அதிமுகவுக்கு இந்த நிலைமையா?… இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் பொழிவிழக்கிறதா அதிமுக?

ஜெயலலிதா இருந்த காலத்தில் அவர் சார்பில் 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதியில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்பமனு தாக்கல் செய்யும் சம்பிரதாயம் இருந்தது. அதாவது ஜெயலலிதாவுக்கு போகத்தான் தங்களுக்கு மிச்சம் என்பது இதன் அர்த்தம். இதனால் கூடுதல் நிதி கட்சிக்குக் கிடைத்தது. பொதுச்செயலாளர் பதவியைத் தூக்கியதுபோல இந்தச் சம்பிரதாயத்தையும் இரட்டைத் தலைமை மாற்றியமைத்தது. அதேபோல நேர்காணலும் ஒரே நாளில் கண்துடைப்புக்காக நடைபெறுகிறது.

Who are EPS and OPS? - Quora

ஜெயலலிதாவின் இல்லாமை, விதிகள் மாற்றியமைப்பு, தலைமை மீதான அவநம்பிக்கை காரணமாக 2016ஆம் ஆண்டே காட்டிலும் இம்முறை 3 மடங்கு அளவிற்கு விருப்ப மனுக்களின் வருகை குறைந்துள்ளது. அதாவது கடந்த முறை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்து குவிந்தன. ஆனால் இம்முறையோ வெறும் 8 ஆயிரம் சொச்சம் மனுக்களே வந்திருக்கின்றன. தலைமைக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையில்லையாம். முன்பே திட்டமிட்டபடி அவர்களுக்குப் பிடித்த ஆட்களை ஏற்கெனவே தேர்வு செய்து வைத்துவிட்டார்களாம்.