வீடு வழங்கும் விழாவில் குத்தாட்டம் போட்ட அதிமுக எம்.எல்.ஏ!

 

வீடு வழங்கும் விழாவில் குத்தாட்டம் போட்ட அதிமுக எம்.எல்.ஏ!

கவுண்டம்பாளையம் அருகே விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே செம்புக்கரை மற்றும் தூமனூர் மலை கிராமங்கள் இருக்கின்றன. அக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் வீடுகள் சேதமடைந்து இருப்பதால் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. அப்பகுதி மக்கள், அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடமும் மனு அளித்துள்ளனர்.

வீடு வழங்கும் விழாவில் குத்தாட்டம் போட்ட அதிமுக எம்.எல்.ஏ!

அந்த மனுவை எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தமிழக அரசிடம் கொண்டு சென்றதன் பேரில், தூமனூர் பகுதியில் 29 வீடுகளும் செம்புக்கரை பகுதியில் 14 வீடுகளும் அரசு சார்பில் கட்டித் தரப்பட்டுள்ளது. அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி, எம்எல்ஏ ஆறுக்குட்டி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆறுக்குட்டி, ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார். கோரிக்கையை ஏற்று அரசு வீடு கட்டிக் கொடுத்தது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரசின் இந்த சேவையை வரவேற்க அப்பகுதி மக்கள் மோள தாளங்களுடன் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது, எம்.எல்.ஏ ஆறுக்குட்டியும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, எங்கு சென்றாலும் ஆறுக்குட்டி உற்சாகமாக நடனமாடுவது வாடிக்கையான ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.